Yelathi

ebook

By Azhwargal Aaivu Maiyam

cover image of Yelathi

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

தமிழர்களுக்கு மிகப் பெரிய பெருமை சேர்க்கும் சங்கம் மருவி நூல்கள் பதினெண் கீழ்கணக்கு நூல்களாகும்.

அவற்றில் ஒன்றுதான் ஏலாதி. இந்த நூல் சிறப்பாயிரம் தற்சிறப்பாயிரம் போன்றவற்றையும் சேர்த்தால் 82 பாடல்களையும் கொண்டது.

இந்த நூலின் ஆசிரியர் கணிமேதாவியர் என்பவர் ஆவார். இவரை கணிந்தார் என்று கூறுவதுண்டு.

இவரின் பெயரின் மூலம் கணிமேதை என்று அறிந்து கொள்ள முடிகிறது. இவரைச் சிலர் ஜோதிட கலை வல்லவர் என்றும் சொல்வார்கள்.

இந்த புலவர் 'மல்லிவர் தோள் மாக்காயனார்' என்று சொல்வார்கள். திணைமாலை 150 என்னும் நூலை இயற்றிய ஆசிரியரும் இவர்தான்.

சிறுபஞ்ச மூலம் என்ற நூலை இயற்றிய காரியாசானும் இவரும் சம காலத்ததவர்கள்.இவர்கள் இருவருமே 'மல்லிவர் தோள் மாக்காயனார்' என்னும் ஆசிரியரின் மாணவர்கள்.

ஏலாதி நூலின் ஆசிரியர் கணிமேதாவியார் சமண சமயத்தைச் சேர்ந்தவர். கடைச் சங்க காலத்திற்குப் பிற்பட்ட நூலாக இது கருதப்படுகிறது.

இந்த நூலில் சமண சமயத்துக்குரிய மிகச்சிறந்த அறநெறி கருத்துக்களான கொலை, களவு, பொய், காமம், மது ஆகியவற்றை நீக்குவதன் அவசியத்தை தெளிவாக எடுத்து கூறுகிறது.

மேலும் இல்லறம், துறவறம் விருந்தோம்பல், ஒழுக்கமுடைமை போன்ற கருத்துகள் எடுத்துக் கூறி விளக்கப்பட்டுள்ளது.

கடை சங்க காலத்திற்கு பின்னால் வந்த இந்த நூல் ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களை குறிப்பிட்ட அளவோடு கலந்து செய்யப்ட்ட ஒருவகை சூரணமே ஏலாதியாகும்.

இந்த சூரணம் உடடலுக்கு வலிமையையும் பொலிவையும் தெம்மையும் தரக்கூடியது. அதைப்போலவே இந்த நூலில் சொல்லப்பட்ட ஆறு கருத்துக்களையும் இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை தரும் விதமாக இந்த நூல் பாடப்பட்டுள்ளது.

திரிகடுகம் நான்கு அடிகளில் மூன்று கருத்துகளை விளக்கி அறியாமையைப் போக்கும் மருந்தை கூறுகிறது.

நான்மணிக்கடிகை நான்கு அடிகளில் நான்கு கருத்துக்களை இந்த மனித சமுதாயத்திற்கு அறிவுறுத்தி நல்வழி காட்டுகின்றது.

சிறுபஞ்சமூலம் என்னும் நூல் நான்கு அடிகளில் ஐந்து கருத்துக்களைக் கூறி இந்த மனித சமுதாயம் நல்வழியில் வாய்த்து இம்மையிலும் மறுமையிலும் நன்மை அடையும் வழிகளைக் கூறுகிறது.

ஏலாதி என்னும் நூல் நான்கு அடிகளில் ஆறு கருத்துக்களைக் கூறி இந்த உலகத்தில் துன்பம் நீக்கி செம்மையுடன் வாழ்வதற்கு என்ன வழி? என்று இந்த சமுதாய மக்களை வாழ வைக்கின்றது.

இவ்வாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்று அருமையான அரிய கருத்துக்களை அமைத்துக் கொடுத்துள்ளன.

இருப்பினும் திரிகடுகம் சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய மூன்று நூல்களும் நோய்களை நீக்கி உடல்நலத்தை கொடுக்கும் மருந்துகளின் பெயர்களால் பாடப்பட்டுள்ளன.

எனவே, இந்த பதினெண் கீழ்கணக்கு நூல்கள் இன்று அரசாங்கத்தால் மொழி கடந்து, தேசம் கடந்து உலகம் முழுவதும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தால் இவற்றை மொழி மாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமைத் தரக்கூடிய இந்த நூல்களை அனைவரும் சுவைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Yelathi