Irulai Virattu

ebook

By N. C. Mohandoss

cover image of Irulai Virattu

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

'துப்பறியும் கதைகள் இலக்கியமா, இல்லையா...?'

இந்தக் கேள்வி - நெடுநாட்களாகவே பலராலும் கேட்கப்படுவது ஓர் உண்மை.

இதற்கான சரியான பதில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை.

ஆனால், பொதுவாகத் துப்பறியும் கதைகள் சற்று புறம்தள்ளப்பட்டே வருகிறது. இத்துறையில் அதிக எண்ணிக்கையிலான கதை நூல்கள் வருவதும், அவற்றை எழுதுபவர்கள் மிகவும் பிரபலமாகத் திகழ்வதும் மறுக்க முடியாத உண்மை. இருப்பினும் ஏன் இக்கதைகள் கொஞ்சம் மாற்றுக் குறைவாக எண்ணப்படுகிறது என்பது புரியாத புதிர்.

அரசோ, தர இலக்கிய அமைப்புக்களோ இதுவரை எந்தத் துப்பறியும் நூலுக்கும் பரிசளித்ததில்லை என்று கூறப்படுகிறது. இது உண்மையாயின், இதுபற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. 'அவனா... அவன் துப்பறியும் கதை எழுதுபவனாயிற்றே' என்று இளப்பமாக ஒருவரை நோக்குவதோ, பேசுவதோ அத்தனை சரி என்று எனக்குப் படவில்லை.

அண்மையில் சென்னை வானொலியில் என் பேட்டி ஒன்று ஒலிபரப்பானது. அதில் இதே கேள்வியைத் 'தகவல் திலகம்' திரு. தென்கச்சி சுவாமிநாதன் கேட்ட போது, நான், 'மக்கள் அதிகம் விரும்பிப் படிக்கிற கதை நூல்களைப் புறம்தள்ளுவது அத்தனை சரியல்ல... இலக்கியம் என்பது, வாழ்விற்கான ஓர் இலக்கை மையமாகக் கொண்டது என்று பெறப்படுமாயின், துப்பறியும் கதைகள், ஒருவன் எத்தனை புத்திசாலித் தனமாகத் தவறுகள் குற்றங்கள் செய்தாலும், மாட்டிக் கொண்டு தண்டனை அனுபவிக்க நேரும் என்ற உண்மையை உணர்த்துவதாகவே எழுதப்படுமாயின், அவை பாராட்டத்தக்கதுதான்' என்றேன்.

இதை இங்கு குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது. நண்பர் என். சி. மோகன் தாஸ் எழுதியுள்ள 'இருளை விரட்டு' கதையைப் படித்தேன். ஒரு நடிகையின் அந்தரங்க விஷயங்களைப் பத்திரிக்கையில் எழுதும் ஒரு நிருபர் கொல்லப்படுகிறார். அந்த நடிகையும் கொல்லப்படுகிறாள். இதைச் செய்தது யார் என்று பல சந்தேகங்களை எழுப்பி, பக்கங்களை விறு விறுப்பாகப் புரட்ட வைக்கிறார். கடைசியில் யாரும் எதிர்பாராத ஒரு முடிவைக் கூறுகிறார். இதில் சஞ்சனா எனும் ஒரு நடிகையின் வாழ்வியல் அவலங்கள் துல்லியமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அவள் குழந்தையின் ஏக்கம் அனைவர் மனத்தையும் இளகச் செய்யும்.

இந்தக் கதையை ஒரு நல்ல துப்பறியும் நவீனமாக என்னால் பார்க்க முடிகிறது. வாசகர்கள் இந்த நூலை நன்கு வரவேற்பார்கள், ஆர்வமுடன் படிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

- கௌதம நீலாம்பரன்

Irulai Virattu