Kop Meyor

ebook

By Kulashekar T

cover image of Kop Meyor

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

ஒவ்வொரு புத்தகமும் ஒரு கூடுதல் வாழ்க்கை.

ஒவ்வொருவரின் வாழ்விலும் நண்பர்கள் நிச்சயம் இருப்பார்கள். வாழ்வில் சோர்ந்திருக்கும் சில சந்தர்ப்பங்களில் என்னை எனக்கு அறிமுகபடுத்தியதே அப்படியான நண்பர்கள் தான். ஆம் நான் புத்தகங்களை தான் சொல்கிறேன். இதோ மார்க் ட்வெயின் என்ற அறிஞர்சொல்வதை கேளுங்கள். நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள், அமைதியான மனம் இவை தான் உன்னதமான வாழ்க்கைக்கான அடித்தளம்.

நல்ல நண்பர்களை போலவே, இடர்மிகுந்த தருணங்களில் நமக்குத் தோள்கொடுத்து நிற்பவை நல்ல புத்தகங்கள். புத்தகங்கள் அறிவுப் புதையல்கள், நம்பிக்கை மாளிகையின் கதவுகள்.

ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கையை, அதன் அனுபவங்களை ஒவ்வொரு நல்ல புத்தகமும் நமக்குள் விதைக்கின்றன.

13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்கோ போலோ எழுதிய பயணங்கள் என்ற மகத்தான புத்தகம்,திரைகடல் ஓடி திரவியம் தேடும் வேட்கையை உலகெங்கும் உருவாக்கியது.

சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற பண்டைக்கால கிரேக்க தத்துவாசிரியர்களின் நூல்களையும், சிஸரோ, செனீக்கா போன்ற பண்டைக்கால லத்தீன் எழுத்தாளர்களின் நூல்களையும், தேடித்தேடிப் படிக்கும் தீவிர ஆர்வம் 14ஆம் நூற்றாண்டின்போது ஐரோப்பாவில் ஏற்பட்டது. இந்த ஆர்வத்தின் விளைவாகத்தான் ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கமும், அதன் தொடர்ச்சியாக உருவான தொழில் புரட்சியும் ஏற்பட்டது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கிய காந்தியடிகள் தனது வாழ்க்கையையே திருப்பிப்போட்ட புத்தகம் என்று ஜான் ரஸ்கின் எழுதிய 'அன்டூ திஸ் லாஸ்ட்' புத்தகத்தை குறிப்பிடுகிறார்.

சார்லஸ் டார்வின் எழுதிய 'ஆர்ஜின் ஆஃப் ஸ்பீஸில்' என்கிற நூல்.உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றி அன்றைக்கு இருந்த மூடத்தனமான கோட்பாடுகளை உடைத்தெரிந்த புத்தகம்.

தாஸ்தாயேவ்ஸ்கியின் கரமசேவ் சகோதரர்கள், குற்றமும் தண்டனையும், சூதாடி அந்த வகையில் சேர்க்க வேண்டிய புத்தகங்கள். குறிப்பாக சூதாடி மிகவும் சிறிய குறுநாவல் தான். ஆனால், அதன் உயரம் நமதான கலை, இலக்கிய உலகம் இன்னும் எட்டிப்பிடிக்கவில்லை. அத்தனை அபாரமாய் ஒரு மனிதனின் அகமனவுலகை துல்லியமாய் இந்த குறுநாவல் ஸ்கேன் செய்திருக்கும்.

தத்துவமேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின், உண்மையான அன்பையும், வன்முறையற்ற, பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவது குறித்துமான அகத்தேடல் பற்றிய நூல் படித்தால் உலக மக்களுக்கு தங்களை பற்றியும், ஒருவரையொருவர் பற்றியதுமான புரிதல் தெளியும்.

பெரியார் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற நூலும் மனிதத்தின் மறையாக போற்றத்தக்க ஒரு நூல். சமத்துவ, சமூகநீதி கொண்ட சமுதாயத்தில் பெண் ஆணோடான சமநிலை சாத்தியமாக்கப்பட்டாக வேண்டும். அதற்கு என்னென்ன செய்தாக வேண்டும் என்கிற அவரின் தேடல் அது.

தி.ஜானகிராமனின் மரப்பசு, ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சிலுவை, கோகிலா என்ன செய்து விட்டாள் போன்ற தமிழ் நாவல்களும் சமூகவியல் பார்வையில் புதிய எல்லைகள் தொடுபவை.

ஓ..ஹென்றியின் தி லாஸ்ட் லீஃப், மாப்பசானின் தி கிஃப்ட், கு.அழகிரிசாமியின் இரு சகோதரர்கள், மௌனியின் பிரபஞ்ச கானம், கு.ப.ராவின் மெஹருன்னிசா, புதுமைப்பித்தனின் சாபவிமோசனம், தனுஷ்கோடிராமசாமியின் அன்புள்ள, ராஜேந்திர சோழனின் புற்றில் உறையும் பாம்புகள், மாதவராஜின் மண்குடம் போன்ற சிறுகதை நூல்களும் அந்த ரகத்தில் சேர்க்கப்படவேண்டியவையே.

உங்கள் சிந்தனையைச் செதுக்க எந்த நூல்கள் உதவும் என்பதுபோன்ற கேள்விகளுடன் தேடினால் மிகச்சிறந்த அறிவுப் புதையல்கள் உங்கள் கையில் கிடைக்கும். அப்படியான எழுத்தாளர்களில் ஒருவர் தான் காம்மேயர். அவர் தன்னம்பிக்கை, வெற்றியின் பாதை என நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளார். அவற்றை படித்து உள்வாங்கியவற்றை என்னுடைய நடைமுறை வாழ்வில் பயன்படுத்தி பெற்ற அனுபவங்களையே இங்கே சிறுநூலாக உங்கள் முன் வைக்கிறேன். இந்த அறிமுக நூல் அவரது பல நூல்களை தேடிப்பிடித்து படிக்க தூண்டும் என்கிற நம்பிக்கையில்.

நேசத்துடன், தி. குலசேகர்

Kop Meyor